TNPSC Tamil Ilakkanam Serthu Eluthuthal Study Materials – Free PDF Download
TNPSC தமிழ் தகுதித்தேர்வு – சேர்த்து எழுதுதல்
“சேர்த்து எழுதுதல்” என்பது இரு வேறு அர்த்தம் கொண்ட இரண்டு சொற்களை ஒரு பொருள் தரும் சொல்லாக மாற்றி எழுதுவது சேர்த்து எழுதுதல் ஆகும். இவ்வாறு எழுதும் போது நிலைமொழியின் ஈறும் வருமொழியின் முதலும் சரியாக புணரும் படி எழுத வேண்டும். இந்நிலையில், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஆர்வலர்களின் புரிதலுக்காக சில முக்கிய சேர்த்து எழுதுதல் வினா விடைகளை கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
TNPSC Tamil Ilakkanam Study Materials – Free PDF Download
| இரு வேறு பிரிந்த சொற்கள் | சேர்ந்த சொல் |
| அறம் + கதிர் | அறக்கதிர் |
| கயிறு + கட்டில் | கயிற்றுக்கட்டில் |
| விண் + நோக்கி | விண்ணோக்கி |
| இன்பு + உருகு | இன்புருகு |
| எழுத்து + அணி | எழுத்தாணி |
| வான் + ஒலி | வானொலி |
| இனிமை + உயிர் | இன்னுயிர் |
| மா + பழம் | மாம்பழம் |
| காடு + ஆறு | காட்டாறு |
| நீர் + ஆவி | நீராவி |
| புவி + ஈர்ப்பு | புவியீர்ப்பு |
| ஓர் + எழுத்து | ஒரெழுத்து |
| அது + இன்றேல் | அதுவின்றேல் |
| மக்கள் + பண்பு | மக்கட்பண்பு |
| பெருமை + செல்வம் | பெருஞ்செல்வம் |
| பெயர் + அறியா | பெயரறியா |
| செம்மை + மொழி | செம்மொழி |
| காலை + பொழுது | காலைப்பொழுது |
| வரகு + அரிசி | வரகரிசி |
| பழைமை + மொழி | பழமொழி |
| அறிந்தது + அனைத்தும் | அறிந்ததனைத்தும் |
| பகைவன் + என்றாலும் | பகைவனென்றாலும் |
| விழித்து + எழும் | விழித்தெழும் |
| எழுத்து + ஆணி | எழுத்தாணி |
| வீரம் + கலை | வீரக்கலை |
| சிலம்பு + ஆட்டம் | சிலம்பாட்டம் |
| நன்மை + வழி | நல்வழி |
| நல்ல + செயல் | நற்செயல் |
| நெகிழி + அற்ற | நெகிழியற்ற |
| குறுமை + படம் | குறும்படம் |
| அரசு + ஆட்சி | அரசாட்சி |
| அறிவு + ஆயுதம் | அறிவாயுதம் |
| அன்னை + தமிழே | அன்னைத்தமிழே |
| பனி + மலர் | பனிமலர் |
| பெரிய + கடல் | பெருங்கடல் |
| நீள் + உழைப்பு | நீளுழைப்பு |
| கலம்பு + அகம் | கலம்பகம் |
| பசுமை + நிணம் | பைநிணம் |
| தண்மை + தளிர் + பதம் | தண்டளிர்ப்பதம் |
| குருவி + கூடு | குருவிக்கூடு |
| மேற்கு + திசை | மேற்றிசை |
| ஞானம் + சுடர் | ஞானச்சுடர் |
| பனி + துளி | பனித்துளி |
| அறிவு + அருள் | அறிவருள் |
| திரிந்து + அற்று | திரிந்தற்று |
| பேர் + அண்மை | பேராண்மை |
| தமிழ் + பேச்சு | தமிழ்பேச்சு |
| நூல் + முகம் | நூன்முகம் |
| செம்மை + கயல் | செங்கயல் |
| நுண்மை + இடை | நுண்ணிடை |
| தொன்மை + நகர் | தொன்னகர் |
| நூறு + கணக்கு | நூற்றுக்கணக்கு |
| நன்மை + இசை | நல்லிசை |
| தினை + துணை | தினைத்துணை |
| உரன் + உடை | உரனுடை |
| வெண்மை + குடை | வெண்குடை |
| மண் +அகம் | மண்ணகம் |
| தனி + ஆழி | தனியாழி |
| செம்மை + பரிதி | செம்பரிதி |
| பழம் + தின்னி | பழந்தின்னி |
| அறிவு + இயல் | அறிவியல் |
| புறம் + தருதல் | புறந்தருதல் |
| பொன் + துகளை | பொற்றுகளை |
| பறவைகள் + ஓடு | பறவைகளோடு |
| இளமை + சிங்கம் | இளங்சிங்கம் |
| பெருமை + அன்பு | பேரன்பு |
| பொன் + நாடு | பொன்னாடு |
| கண் + நீர் | கண்ணீர் |
| புலி + தோல் | புலித்தோல் |
| உழுது + உழுது | உழுதுழுது |
| அருமை + பொருள் | அரும்பொருள் |
| கம்பலை + புடவி | கம்பலைப்புடவி |
| தனி + அன் | தனியன் |
| மலைவு + இலாது | மலைவிலாது |
| கால் + அழி | காலாழி |
| இடன் + அற | இடனற |
| கொழுமை + சோறு | கொழுங்சோறு |
| தண்டு + உடை | தண்டுடை |
| முதுமை + ஊர் | மூதூர் |
| பொது + சிறப்பு | பொதுச்சிறப்பு |
| சே + இலை | சேயிழை |
| நல்ல + பண்பு | நற்பண்பு |
| அகன்ற + அலை | அகன்றலை |
| ஞானம் + தமிழ் | ஞானத்தமிழ் |
| வாய்த்து + ஈயின் | வாய்த்தீயின் |
| தயிர் + சோறு | தயிர்ச்சோறு |
| கொழுமை + கனல் | கொழுங்கனல் |
TNPSC Study Materials in Tamil – PDF Free Download
Join the ExamsDaily WhatsApp Group


























