IPL 2025: பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சென்னை அணி.. மீண்டும் ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (25-04-2025) நடைபெற்ற IPL தொடரின் 43-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 154 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணி 18.4 ஒவரில் 155 ரன்கள் எடுத்து சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா செந்தில் பாலாஜி..? வலுக்கும் சந்தேகங்கள், வெளியான ஆதாரம்..!!
இப்போட்டியில் சென்னை அணிக்காக விளையாடிய ஆயுஷ் மாத்ரே (30), டெவால்டு பிரேவிஸ் (42) தீபக் ஹூடா (22) ஆகியோர் அதிகபட்ச ரன்கள் எடுத்தனர். மறுபுறம் ஐதராபாத் சார்பில் இஷான் கிஷன் (44), கமிந்து மெண்டிஸ் (32), டிராவிஸ் ஹெட் (20), அனிகெட் வர்மா (19) ஆகியோர் அதிகபட்ச ரன்கள் குவித்தனர். மேலும், சென்னைக்கு எதிராக ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ், உனத்கட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இப்போட்டியின் மூலம் “IPL வரலாற்றில் ஒரு இன்னிங்சில் முதல் பந்திலேயே 4 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார். மேலும் நடப்பு IPL தொடரில் 2 வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ள சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது” ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.


























