அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா செந்தில் பாலாஜி..? வலுக்கும் சந்தேகங்கள், வெளியான ஆதாரம்..!!

0
???????? ?????? ???????? ?????????? ???????? ??????..? ????????? ???????????, ??????? ??????..!!
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா செந்தில் பாலாஜி..? வலுக்கும் சந்தேகங்கள், வெளியான ஆதாரம்..!!

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா செந்தில் பாலாஜி..? வலுக்கும் சந்தேகங்கள், வெளியான ஆதாரம்..!!

கடந்த ஆண்டு சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதன் பிறகு, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மறுநாளே அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில், இவர் அமைச்சராக பதவியேற்று கொண்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் “அவர் அமைச்சராக இல்லை என்பதாலே ஜாமீன் வழங்கப்பட்டது என்றும், அவருக்கு ஜாமீன் வேண்டுமா..? அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா..?” என்று ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது. இதனால், இவர் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என்று செய்திகள் பரவி வந்தன .

பஹல்காம் தாக்குதல் பற்றி பிரபல நாளிதழ் வெளியிட்ட கருத்து.. கண்டனம் தெரிவித்த அமெரிக்க அரசு..!!

இந்நிலையில், இன்று நிகழ்ச்சி நிரலில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்பட்ட, உயிரி மருந்து கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறை தண்டனை விதிக்கும் மசோதாவை அவருக்கு பதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். இதனால், உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் ஜாமீனுக்காக செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை செய்யலாம் என்னும் சந்தேகங்கள் வலுத்துள்ளன.

 Join the ExamsDaily WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!