இனி குழந்தைகள் தனி வங்கிக் கணக்கு தொடங்கலாம்.. RBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

0
??? ?????????? ??? ??????? ?????? ??????????.. RBI ????????? ?????? ?????????..!!
இனி குழந்தைகள் தனி வங்கிக் கணக்கு தொடங்கலாம்.. RBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

இனி குழந்தைகள் தனி வங்கிக் கணக்கு தொடங்கலாம்.. RBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

பொதுவாக வங்கிக் கணக்கைத் திறக்க குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும் என்பது அனைத்து நிதி நிறுவனகளிலும் பின்பற்றப்படும் கட்டாய விதிமுறையாகும். மேலும், இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி, வங்கி கணக்கு துவக்கம் மற்றும் நடைமுறைகள் குறித்த விதிமுறைகளில் புதிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகயுள்ளது.

Cognizant நிறுவனத்தில் Product Specialist காலிப்பணியிடங்கள் – ஜாக்பாட் வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

அதாவது, “10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சொந்தமாக வங்கிக் கணக்கு தொடங்கலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தக் கொள்கை ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் என்றும், நாட்டிலுள்ள அனைத்து வணிக வங்கிகள், மாநில மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் இந்த விதியை பின்பற்ற வேண்டும்” என RBI தெரிவித்துள்ளது. மேலும், கணக்குகளை நிர்வகிக்க வங்கிகளுக்கு சில விதி மாற்றத்திற்கான அனுமதியையும் RBI அளித்துள்ளது. அதன்படி குழந்தைகளின் கணக்கில் டெபாசிட் செய்யக்கூடிய அதிகபட்ச தொகை, பராமரிக்கக்கூடிய இருப்பு மற்றும் பிற பரிவர்த்தனைகளுக்கு இடர் மேலாண்மை கொள்கைகள் வரம்புகளை விதிக்கலாம். இணைய வங்கி, ATM கார்டுகள் மற்றும் காசோலை புத்தகங்கள் போன்ற கூடுதல் வசதிகளை வழங்குவதில் வங்கிகள் தங்கள் விருப்புரிமையைப் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!