ஒரு வருடம் கூட ஆகவில்லை.. மீண்டும் உயர்த்தப்படும் ரீசார்ஜ் கட்டணங்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!!

0
??? ?????? ??? ????????.. ???????? ?????????????? ???????? ??????????.. ??????? ????????? ?????.!!
ஒரு வருடம் கூட ஆகவில்லை.. மீண்டும் உயர்த்தப்படும் ரீசார்ஜ் கட்டணங்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!!

ஒரு வருடம் கூட ஆகவில்லை.. மீண்டும் உயர்த்தப்படும் ரீசார்ஜ் கட்டணங்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட் போன்களை உபயோகின்றனர். மேலும், இன்டர்நெட் பயன்பாடு, வாய்ஸ் கால், மெசேஜ் உள்ளிட்ட சேவைகளுக்காக ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்தாண்டு ஜூலை மாதம் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்கள் பிரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களின் கட்டணத்தை உயர்த்தியது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்திக்கு ஆளானார்கள். இந்நிலையில் மீண்டும் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

CBSE பாடப்புத்தகங்களுக்கு இந்தியில் பெயர்…!! இதற்கு NCERT சொன்னது என்ன தெரியுமா..?

அதாவது, “இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 5G பரவலான வசதிகளை வழங்கும் நோக்கில் 2025 ஆண்டின் இறுதிக்குள் தங்களின் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை 10% முதல் 20% வரை உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது”. மேலும், இது பற்றி வல்லுநர்கள் கூறுகையில், “ரூ.100-200 வரை உள்ள குறைந்த விலை திட்டங்கள் 10%, ரூ.300-500 இடைநிலை திட்டங்கள் 15% மற்றும் பிரீமியம் 5G திட்டங்களுக்கு 20% வரை விலை உயர்வு இருக்கக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது செயல்பாட்டு செலவுகள், ஸ்பெக்ட்ரம் கட்டணம் மற்றும் 5G அடிப்படை கட்டமைப்புக்கு மேற்கொள்ளப்படும் பெரும் முதலீடுகள் காரணமாக மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!