IPL 2025 CSK vs MI: போட்டியில் வெல்லப்போவது யார்..?? மீண்டும் ஃபார்முக்கு திரும்புமா CSK..?? எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!!

0
Chennai Super Kings vs Mumbai Indians match to held tomorrow at Wakande stadium
Chennai Super Kings vs Mumbai Indians match to held tomorrow at Wakande stadium

IPL 2025 CSK vs MI: போட்டியில் வெல்லப்போவது யார்..?? மீண்டும் ஃபார்முக்கு திரும்புமா CSK..?? எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!!

2025 ஆம் ஆண்டுக்கான IPL கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பல்வேறு அணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், ரசிகர்களின் அதீத ஆதரவை பெற்ற சென்னை அணியின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. மேலும், விளையாடிய 7 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் CSK அடுத்த போட்டியில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை நாளை (20-04-2025) எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.

மேலும், தொடர்ந்து தோல்வியை சந்தித்த CSK அணி கடைசியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்று தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதை தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக களமிறங்க இருக்கும் போட்டியில் CSK அணி ராகுல் திரிபாதியை அணியில் இருந்து நீக்குவது மட்டுமின்றி காயம் காரணமாக வெளியேறிய குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக தென்னாப்பிரிக்காவின் இளம் சர்வதேச வீரர் டெவால்ட் பிரெவிஸை அணியில் சேர்க்கப்பட்டது என இரண்டு மாற்றங்கள் மட்டும் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் நாளை நடக்கவிருக்கும் இப்போட்டியில் எந்த அணி வெல்லும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!