புனித வெள்ளி விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. போக்குவரத்து கழகம் அறிவித்த முக்கிய தகவல்..!!

0
????? ?????? ?????????? ?????????? ??????? ??????????? ???????.. ???????????? ????? ???????? ??????? ?????..!!
புனித வெள்ளி விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. போக்குவரத்து கழகம் அறிவித்த முக்கிய தகவல்..!!

புனித வெள்ளி விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. போக்குவரத்து கழகம் அறிவித்த முக்கிய தகவல்..!!

பண்டிகைகளின் போது வழங்கப்படும் தொடர் விடுமுறைகளில் வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம். இதை பயன்படுத்தி ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இந்நிலையில் “புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி கும்பகோணம் கோட்டம் சார்பில் இன்று (18-04-2025) முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு 625 சிறப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது”.

மதுரை மக்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்.. இன்று முதல் திருமலை நாயக்கர் மகாலுக்கான அனுமதி இலவசம் ..!!

இதை தொடர்ந்து, கும்பகோணம் கோட்டம் சார்பில் தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண்யம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, ராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுகிறது. மேலும், பயணிகள் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பரிசோதகர்கள் பணியமர்த்தப்பட்டு பேருந்துகளின் இயக்கத்தை சீரமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!