மீண்டும் சீனா மீதான வரி உயர்வு.. தீவிரம் அடையும் வர்த்தக போர்.. வெளியான முக்கிய அறிக்கை..!!
அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த கூடுதல் இறக்குமதி வரி விதிப்புகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சீனா, அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 84% மாற்றியது. இதை கண்டித்து சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கான வரிகளை 125% உயர்த்தப்பட்டு உடனடியாக அமல்படுத்துவதாக டிரம்ப் அறிவித்தார். இதனால் அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போர் வலுப்பெற்றது.
இதை தொடர்ந்து, “ஏப்ரல் 14 அன்று அமெரிக்காவுக்கு வழங்கும் கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா அதிரடியாக நிறுத்தியது. இதனால் அமெரிக்காவின் நுகர்வோர் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்க தேவையான மூலக் கூறுகள் முற்றிலுமாக தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 245 % உயர்த்தியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது”.


























