
மத்திய அரசு வழங்கும் நிதியுதவி.. விவசாயிகளின் கணக்கிற்கு கிடைக்கும் ரூ.2000.. விண்ணப்பிப்பது எப்படி..??
விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் ரூ.2000 வீதம் ஒரு ஆண்டுக்கு மொத்தம் மூன்று தவணைகளாக ரூ.6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும், தகுதியுள்ள விவசாயிகள் தங்களுக்கான பலன்களை இழக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய புதிய பயனாளர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. இந்நிலையில் இத்திட்டம் குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
Cognizant நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
அதாவது, “கடந்த ஆண்டு PM-KISAN திட்டத்தின் கீழ் 19 வது தவணை ஆனது வழங்கப்பட்ட நிலையில் 20 வது தவணை வரவிருக்கும் ஜூன் மாதத்தில் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது”. இருப்பினும், அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இத்திட்டத்தின் மூலம் பயன் பெற விவசாயிகள் கட்டாயம் KYC சரிபார்ப்பு செய்திருக்க வேண்டும். இதை “https://pmkisan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விவசாயிகள் தாங்களாகவோ அல்லது ஏதேனும் ஒரு வாடிக்கையாளர் சேவை மையம் மூலமாகவோ தங்களது விவரங்கள் சரிபார்ப்பு செயல்முறையை பூர்த்தி செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது”.

























