
வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தவெக வழக்கு..!! சற்று முன் வெளியான தகவல்..!!
கடந்த சில நாட்களுக்கு முன்பு கடும் அமளிக்கிடையே நாடாளுமன்றத்தில், கூட்டுக்குழு பரிந்துரைக்காக அனுப்பப்பட்ட வக்பு வாரிய திருத்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. 12 மணி நேரத்திற்கும் மேலாக இம்மசோதா மீது விவாதம் நடந்து பின் , நள்ளிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இம்மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரிடையே இருந்தும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இந்த மாநிலத்தில் வக்பு வாரிய திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது…!! சிறுபான்மை நலத்துறை அமைச்சர் தகவல்..!!
இந்நிலையில், இந்த வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தவெக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த மசோதாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்த தவெக தலைவர் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழகத்தில் இருந்து இதற்கு முன் திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் இம்மசோதாவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

























