இந்த மாநிலத்தில் வக்பு வாரிய திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது…!! சிறுபான்மை நலத்துறை அமைச்சர் தகவல்..!!

0
???? ??????????? ????? ????? ??????? ?????? ?????????????????...!! ?????????? ???????? ???????? ?????..!!
இந்த மாநிலத்தில் வக்பு வாரிய திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது...!! சிறுபான்மை நலத்துறை அமைச்சர் தகவல்..!!

இந்த மாநிலத்தில் வக்பு வாரிய திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது…!! சிறுபான்மை நலத்துறை அமைச்சர் தகவல்..!!

கடந்த வருடம் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய திருத்த மசோதாவை தாக்கல் செய்தது. இதற்கு எதிர்கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இம்மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு பரிந்துரைக்காக அனுப்பப்பட்டது. அங்கு, சில திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் நாடாளுமன்றத்தில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 12 மணி நேரத்திற்கும் மேலாக இம்மசோதா மீது விவாதம் நடந்தது. பின் கடும் அமளிக்கிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, நள்ளிரவில் இம்மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்திற்கு, எதிராக பல்வேறு தரப்பினரிடையே தற்போதும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில், இச்சட்டம் தங்களது மாநிலத்தில் அமல்படுத்தப்படாது ஒரு அமைச்சர் கூறியுள்ளார். அதுகுறித்து கீழே விரிவாக காண்போம்.

இனி ஆதார் அட்டைக்கு குட் பாய்..!! வெளியானது ஒரு சூப்பர் ஆப்…!!

அதாவது, கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவையில், சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் தான் ஸமீர் அஹமது. இவர் தற்போது கொடுத்த பேட்டி ஒன்றில், மத்திய அரசின் வக்பு வாரிய திருத்தச்சட்டம் கர்நாடகாவில் அமல்படுத்தப்படாது என்று அறிவித்துள்ளார். மேலும், இப்பிரச்னைக்கு நீதிமன்றத்தின் வழியாக தீர்வு காண உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!