
வரலாற்றில் முதல் முறையாக குடியரசு தலைவருக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்..!! மாஸ் காட்டும் தமிழக அரசு..!!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஆளும் திமுக அரசிடையே கடந்த சில வருடங்களாகவே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை அங்கீகரிக்காமல் அதிகம் காலம் தாழ்த்துவதாக குற்றம் சாட்டி வந்த திமுக அரசு, ஆளுநரை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ஆளுநரை கடுமையாக சாடி, அவர் நிறுத்தி வைத்திருந்த மசோதாக்களை சட்டமாக்க உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மற்றொரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
IPL 2025: தொடர் தோல்வியால் தடுமாறும் சென்னை அணி.. பிளே ஆஃப் செல்ல என்ன செய்ய வேண்டும்..??
அதாவது, ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கினுடைய 415 பக்கங்களை கொண்ட தீர்ப்பை உச்சநீதிமன்றம் அதன் இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. அதில், “குடியரசு தலைவர் ஆளுநர் அனுப்பிவைக்கும் மசோதாக்கள் மீது 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; முடிவு எடுக்க முடியாவிடில் அதற்கான காரணத்தை அந்தந்த மாநில அரசுகளுக்கு தெரிவிக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளது. மேலும், “3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படவிடில், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உரிய நீதிமன்றங்களை அணுகலாம்; நியாமான காலத்திற்குள் முடிவு எடுக்காவிடில் நீதிமன்றங்கள் பார்த்து கொண்டு இருக்காது” எனவும் எச்சரித்துள்ளது. மேலும், சுதந்திரத்திற்கு பின் குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதிப்பது இதுவே முதல் முறை ஆகும்.

























