DRDO ஆணையத்தில் Project Scientist வேலை – 130+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் எனப்படும் DRDO – ADA ஆனது Project Scientist பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 137 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
DRDO காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Scientist பணிக்கென காலியாக உள்ள 137 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Engineering / Master Degree / Ph.D தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
DRDO வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 மற்றும் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
NPCIL நிறுவனத்தில் 120+ காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!!
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.90,789/- முதல் ரூ.1,08,073/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
DRDO தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Short Listing / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


























