
விலைவாசி ஏற்றதை சமாளிக்க முடியலையா.. நகைக்கடன் வாங்க போறீங்களா..?? அப்போ இந்த விதிமுறைகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க..!!
அவசர தேவைகளை நிவர்த்தி செய்ய தங்க நகைகள் நிச்சயமாக ஒரு நல்ல கருவியாக உள்ளது. அதாவது, தங்க நகைகளை அடமானமாக பயன்படுத்தி கடன் பெறலாம். இதை வங்கி விதிமுறைகள் படி கோல்டு லோன் என்பர். இதில் கடனை திருப்பி செலுத்தும் வரை தங்கம் பாதுகாப்பாக கடன் வழங்குனரிடம் இருக்கும் என்பதால் பெரும்பாலான மக்கள் இந்த முறையை தேர்வு செய்கின்றனர். இந்நிலையில் நகைக்கடனின் முக்கியமான அம்சங்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.
TNPSC குருப் 4 தேர்வு குறித்த ஓர் முக்கிய செய்தி…!! இத மிஸ் பண்ணிராதீங்க மக்களே..!!
இந்த முறையில் “கடன் வழங்குனரை பொறுத்து உங்களுடைய தங்கத்தின் சந்தை மதிப்பில் 75% வரை கடனாக பெறலாம். மேலும், பர்சனல் லோன்களைப் போல அல்லாமல் கடன் அங்கீகரிக்கப்படுவதில் உங்களுடைய கிரெடிட் வரலாறு இதில் மிகக் குறைவான பங்கு வகிக்கிறது. இந்த கடனில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால் நீங்கள் மாதம் மாதமாகவோ அல்லது இறுதியில் ஒரு பெரிய தொகையாகவோ பணத்தை திருப்பி செலுத்தலாம். பொதுவாக நகை கடன்களுக்கு பெரும்பாலும் 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரையிலான குறுகிய கால அவகாசம் வழங்கப்படுகிறது. இறுதியாக தங்க நகையுடன் அடிப்படையான ஆவணங்களை சரிவர வைத்திருக்கக்கூடிய யார் வேண்டுமானாலும் வங்கி அல்லது ஏதேனும் நிதி நிறுவனத்தை அணுகி நகை கடனை பெற்றுக் கொள்ளலாம்”.


























