
Gold Rate Today: வாரத்தின் முதல் நாளில் வந்த குட் நியூஸ்.. தமிழகத்தில் தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை..!!
உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாக, சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை பார்க்கிறார்கள். எனவே கடந்த சில மாதங்களாக தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. இந்நிலையில் கடந்த வாரத்திலிருந்து, தங்கம் விலை குறைந்து வருகிறது.
ECHS ஆணையத்தில் Data Entry Operator வேலை – ரூ.75,000/- சம்பளம் || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
அதாவது, தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (05-04-2025) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.90 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,310-க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து, ஒரு சவரன் ரூ.66,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, “இன்று (07-04-2025) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.25 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,285-க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.66,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது”.

























