2024-25 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியில் முதலிடம்..! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!
சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த மார்ச் 13 ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழுவின் ஆறாவது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில திட்டக் குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட 2024- 25 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில திட்டக்குழுவின் செயல் துணை தலைவர் ஜெயரஞ்சன் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி வரும் ஆண்டுகளில் 12 சதவிகிதம் வரை உயரக்கூடும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்நிலையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 7ம் தேதி நடைபெற உள்ள தேர்வு ஒத்திவைப்பு – முழு விவரங்களுடன்!
அதாவது, “2024-25 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை காட்டிலும் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டி உள்ளதாக ஒன்றிய அரசின் திட்ட அமலாக்கத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், 2023-24 நிதியாண்டில், ரூ.15,71,368 கோடியாக மதிப்பிடப்பட்ட தமிழகத்தின் உள்நாட்டு உற்பத்தி, 2024-25 ல் ரூ.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளது என்றும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இதுவே மிக உயர்ந்த வளர்ச்சி விகிதமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது”.



























