பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் 1% கட்டண சலுகை…!! யாருக்கெல்லாம் இது பொருந்தும்…?? இதோ உங்களுக்காக 

0
??????? ??????? ????????????? ???????? 1% ????? ?????...!! ?????????????? ??? ??????????...?? ??? ??????????? 
பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் 1% கட்டண சலுகை...!! யாருக்கெல்லாம் இது பொருந்தும்...?? இதோ உங்களுக்காக 

பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் 1% கட்டண சலுகை…!! யாருக்கெல்லாம் இது பொருந்தும்…?? இதோ உங்களுக்காக 

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், 10 லட்சம் வரை மதிப்புள்ள வீடுகள், மனைகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு, பெண்கள் பெயரில் பத்திர பதிவு செய்தால், 1% கட்டண சலுகை வழங்கப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, தற்போது இந்த சலுகை யாருக்கு பொருந்தும், யாருக்கு பொருந்தாது என்பன குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பத்திரப்பதிவு துறை வெளியிட்டுள்ளது.

திடீரென உயரும் கார்களின் விலை..?? தாறுமாறாக கூடும் வரி வசூலிப்பு..!! வெளியான சிறப்பு தகவல்..!!

அதன்படி, சொத்தை வாங்குபவர் பெண்ணாக இருந்தாலோ அல்லது பெண்கள் கூட்டாக வாங்கப்படும் நிலங்களுக்கு மட்டுமே இந்த கட்டண சலுகை பொருந்தும் என தெரிவித்துள்ளது. மேலும், ஒரு சொத்தினை குடும்ப நபர்கள் மட்டும் இணைந்து வாங்கி, அது பெண்கள் பெயரில் இருந்தால் இந்த கட்டண சலுகை பொருந்தும். ஆனால், ஒரு சொத்து கூட்டாக கணவன், மனைவி பெயரில் இருந்தால் இந்த கட்டண சலுகை பொருந்தாது. மேலும், இந்த சலுகையை பெறுவதற்காகவே, ஒரு சொத்தை பல பத்திகளாக பிரிக்க கூடாது என்றும், இதுவரை பதிவான ஆவணங்களுக்கு செலுத்தப்பட்ட கட்டணங்கள் திரும்ப பெற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!