தமிழ்நாட்டில் இன்று (ஏப்.1) முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகள் – முழு விவரங்களுடன்!

0

தமிழ்நாட்டில் இன்று (ஏப்.1) முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகள் – முழு விவரங்களுடன்!

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை இரண்டு கட்டங்களாக சுங்கக் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக, 40 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 10 லட்ச ரூபாய் வரையிலான வீடு அல்லது நிலத்தை பெண்கள் பெயரில் பதிவு செய்தால், பதிவுக் கட்டணத்தில் 1% குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது இன்று முதல் அமலுக்கு வரும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.

யுபிஐ கணக்குகளில் முக்கிய மாற்றம்..! முழு விவரங்களுடன்!

எஸ்பிஐ வங்கி, IDFC ஃபர்ஸ்ட் வங்கி அல்லது ஆக்சிஸ் வங்கி ஆகியவை ரிவார்டு பாயிண்டுகளில் சில மாற்றங்களைச் செய்யவுள்ளன. இந்த மாற்றங்கள் ஆனது அந்த வங்கியின் வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன. அதன்படி ஒரே மாதத்தில் வணிக சிலிண்டரின் விலை சற்று குறைந்து தற்போது ரூ.1,921.50-ஆக குறைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!