
Today Gold Rate: ஏப்ரல் மாதத்தின் முதல் நாளே எகிறிய தங்கம் விலை…!! தமிழகத்தில் இதுவரை இல்லாமல் புதிய உச்சத்தில் விற்பனை
தங்கம் விலை கடந்த ஜனவரி மாதம் ஒரு சவரன் ரூ. 55,000 ஆயிரத்தை தொட்டது. அதன்பின், மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதனால், தங்கத்தின் விலை மளமளவென குறைந்து, ஒரு சவரன் ரூ. 51,000 க்கு கீழ் வந்தது. ஆனால், எந்த வேகத்தில் அப்போது தங்கம் விலை குறைந்ததோ, அதைவிட அசுர வேகத்தில் தற்போது அதிகரித்து வருகிறது. அந்தவகையில், இன்று (01.04.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.
TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு சற்றுமுன் வெளியீடு – 70 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்
அதாவது, இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து 1 சவரன் ரூ. 68,080 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம் 8,510 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி 1 கிலோ ரூ. 1,14,000 ஆகவும், 1 கிராம் ரூ. 114 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

























