
தொலைத்தொடர்பு துறையில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்.. மத்திய அரசின் வசமாகும் பிரபல நிறுவனம்.. அதிர்ச்சியில் மக்கள்..
இந்திய தொலைத்தொடர்பு துறையில் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக வோடபோன் ஐடியா (VI India) விளங்கி வருகிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளில் கடன் சுமை, தொழில்நுட்ப மாற்றங்கள் போன்ற காரணிகளால் அந்நிறுவனத்தின் வளர்ச்சி மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக, VI நிறுவனத்திற்கு தேவையான நிதியை திரட்டுவதற்கும், அதன் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வந்தது. இந்நிலையில் மத்திய அரசு வழங்கி வந்த உதவிகள் பற்றிய முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
TNPSC Group II, IIA & IV General Tamil Quiz with Answer || Unit 2 Section 2 Part D – PDF Download…!!
அதாவது, “கடனில் சிக்கியுள்ள வோடஃபோன் ஐடியா நிறுவனத்தில் 22.6 % பங்குகளுடன் இருக்கும் மத்திய அரசு செப்டம்பர் 2021-ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு துறைக்கான சீர்திருத்தங்களின் அடிப்படையில், தனது பங்குகளை 48.99% ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. மேலும், மொத்தமாக ரூ. 36,950 கோடி மதிப்பிலான நிலுவை தொகையை செலுத்த முடியாததால் வோடபோன் நிறுவனம் மத்திய அரசிற்கு தனது பெரும்பான்மையான பங்குகளை வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது”.

























