தமிழக அரசில் Yoga Instructor வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
வேலைவாய்ப்பு விவரங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Yoga Instructor பணிக்கென காலியாக உள்ள 36 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor of Naturopathy and Yogic Sciences தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு DHS -ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.03.2025ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



























