
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்…!! மாநிலம் முழுவதும் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுவதாக தகவல்…!!
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி வருகின்ற ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் தேர்வு அட்டவணையை வெளியிட்டது. இதனை தொடர்ந்து, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் தேர்வான தமிழ் மொழி பாடத் தேர்வு இன்று காலை 09.30 மணிக்கு தொடங்கியது. மேலும், தமிழகம் முழுவதும் 4113 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு, மொத்தம் 9,13,084 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Today Gold Rate: தமிழகத்தில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! இன்னைக்கு ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா…??
மேலும், தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கிட தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வு நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பணிக்காக காவல் துறையிடமும், தேர்வு நடைபெறும் பள்ளிகளில் போதுமான வசதிகளை செய்துதர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்வு மையங்களில் முறைகேடுகளை தவிர்க்க தமிழகம் முழுவதும் 4,800 பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.























