G Pay, Paytm போன்ற UPI செயலிகளை பயன்படுத்துபவரா நீங்கள்..?? அப்போ உடனே இந்த விஷயங்களை மாத்திடுங்க..
அதாவது, பயனாளர் மேற்கொள்ளும் ஒவ்வொரு UPI பரிவர்த்தனையையும் பாதுகாப்பானதாக நிறைவு பெற 4 அல்லது 6 இலக்க UPI பின் நம்பரை உள்ளிட வேண்டும். இந்த அம்சமானது சரியான பயனரால் பணம் செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டது. மேலும், UPI பின் நம்பரை அமைக்க டெபிட் கார்டு மிக முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆனால் இப்போது UPI பின் நம்பரை ஆதார் அட்டையின் உதவியுடன் உருவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உங்கள் “வங்கி கணக்கை ஆதாருடன் இணைக்கபட்டுயிருக்க வேண்டும். அதன் பிறகு UPI செயலியில் “Add Bank Account” என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் உங்களுடைய வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்க உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் வங்கிக் கணக்கு தானாகவே இணைக்கப்படும். இதை தொடர்ந்து, UPI பின் நம்பரை அமைக்கும் விருப்பம் வரும்போது, “Aadhaar OTP” விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP நம்பரை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும். பின்னர் 4 அல்லது 6 இலக்கங்கள் கொண்ட புதிய UPI பின் நம்பரை உருவாக்கி பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது”.
























