தமிழகத்தை பின்பற்றும் தெலுங்கானா..!! தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதாக தகவல்…!
மத்திய அரசு சமீபத்தில், தொகுதி மறுவரையறை சட்டத்தை கொண்டு வரப்போவதாக தகவல் ஒன்றை வெளியிட்டது. ஆனால், இதற்கு தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை கூட்டு நடவடிக்கை கூட்டத்தில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார்.
இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்.. பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்..
அப்போது, பேசிய அவர் “தொகுதி மறுவரையறை நமக்கு கிடைத்த தண்டனை” என்றும் “பா.ஜ.கவினர் நம்மை பேச அனுமதிக்காமல், அவர்கள் நினைப்பதையே இறுதி முடிவாக எடுப்பதாகவும்” தெரிவித்தார். மேலும், “தொகுதி மறுவரையறைக்கு எதிராக விரைவில் தெலுங்கானா சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்றும் அறிவித்தார். இந்நிலையில், இன்று மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும், அந்த தீர்மானத்தில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்யக்கூடாது என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளதாகவு



























