
உங்களின் PF கிளைம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா..?? சரி செய்ய இந்த செயல்முறையை பின்பற்றினால் போதும்..
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் ஓய்வூதியத் திட்டமாகும். மேலும், இத்திட்டத்தின் மூலம் EPFO உறுப்பினர்கள் தங்கள் ஓய்வூதிய நிதி (EPF) கணக்கில் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்கிறார்கள். இவ்வாறு செலுத்தப்படும்
வைப்புத்தொகையை ஊழியர்கள் தேவைப்படும் நேரத்தில் கிளைம் செய்து கொள்ளலாம். மேலும், சில காரணங்களால் இந்த கிளைம் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் நிராகரிக்கப்பட்ட PF கிளைம் கோரிக்கைகளை சரி செய்வது குறித்து இப்பதிவில் காண்போம்.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தமில்லை…!! கோரிக்கையை நிராகரித்த தமிழக அரசு…!
அதாவது, EPF கிளைம்கள் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்களில் பொதுவான ஒன்று, வங்கிக் கணக்கு அல்லது வேலைவாய்ப்புத் தகவல் உட்பட, கிளைம் ஃபார்மில் உள்ள முழுமையற்ற விவரங்களே ஆகும். மேலும், செயலற்ற யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்களை (UAN) பயன்படுத்தி செய்யப்படும் கிளைம்கள், சர்வீஸ் ரெக்கார்டுகளில் உள்ள முரண்பாடுகள், நிலுவையில் உள்ள தொகையை செலுத்தாதது போன்ற காரணங்களால் உங்கள் கிளைம் கோரிக்கை தகுதியற்றதாக கருதப்பட்டு நிராகரிக்கப்படுகின்றன. இந்த நிராகரிக்கப்பட்ட விண்ணப்பத்தை சரிசெய்ய “முதலில் EPFO கிளைம் ஸ்டேட்டஸில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை சரிபார்க்கவும். பின்னர் அதில் விடுபட்ட தகவல் நிரப்புதல், அவற்றில் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யவும். இதை தொடர்ந்து, UAN மெம்பர் போர்ட்டலில் லாகின் செய்து சரியான கிளைம் படிவத்தை (Form 19, 10C அல்லது 31) தேர்ந்தெடுக்கவும். அதன் பின்னர் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை என்டர் செய்து, தேவையான ஆவணங்களை அப்லோடு செய்யவும். இறுதியாக உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP-ஐ என்டர் செய்து, உங்கள் PF கிளைம் விண்ணப்பத்தை சமர்ப்பித்தன் மூலம் கிளைம் கோரிக்கை மீண்டும் பகுப்பாய்வு செய்யப்படும்”.

























