புதிதாக 10,000 பேருக்கு முதியோர் உதவி தொகை…!! சட்டமன்றத்தில் முதல்வர் வெளியிட்ட முக்கிய தகவல்
புதுச்சேரி அரசின் முதியோர் உதவி தொகை திட்டமானது, பயனாளர்களின் வயதிற்கேற்ப மூன்று வகையான நிதி உதவியை வழங்கி வருகிறது. அதாவது, 50 -59 வயது வரை உள்ள முதியோர்களுக்கு 2,000 ரூபாய், 60 -79 வயது வரை உள்ள முதியோர்களுக்கு 2,500 ரூபாய் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ. 3,500 நிதிஉதவியும் மாதந்தோறும் வழங்கி வருகிறது. மேலும், நடப்பாண்டிற்கான புதுச்சேரி பட்ஜெட்டை கடந்த மார்ச் 12 ஆம் தேதி புதுச்சேரி முதல்வரும் நிதியமைச்சருமான ரங்கசாமி தாக்கல் செய்தார்.
அதில், குறிப்பாக முதியோர் உதவித்தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தில், முதியோர் உதவி தொகை கோரி புதிதாக விண்ணப்பித்த 10,000 முதியோர்களுக்கு வருகின்ற மே மாதத்தில் இருந்து நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


























