
உங்களுக்கு “முதலமைச்சரின் உழவர் அட்டை” பற்றி தெரியுமா…?? கொட்டி கிடக்கும் சலுகைகள்…உடனே விண்ணப்பம் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு விவசாய மக்களுக்கு பல்வேறு நல திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில், தற்போது “முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம்” குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். அதாவது, இத்திட்டத்தின் கீழ் உழவர் அட்டை பெறும் பயனாளிகள் உட்பட குடுபத்தினர் அனைவருக்கும் சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி, பயனாளரின் குடும்பத்திற்கு திருமண நிதி உதவியாக ஆணிற்கு ரூ. 8,000 தொகையும், பெண்ணிற்கு ரூ. 10,000 தொகையும் வழங்கப்படுகிறது. மேலும், உறுப்பினர் இறக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ரூ. 20,000 தொகையும், இறுதி சடங்கிற்கு ரூ. 2,500 தொகையும் அளிக்கப்படுகிறது.
இதையடுத்து, கல்வி நிதி உதவியாக, அவர்களுடைய கல்வி நிலையை பொறுத்து வழங்கப்படுகிறது. மேலும், முதியோர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ. 1,000 அளிக்கப்படுகிறது. குறிப்பாக, இத்திட்டத்திற்கு 18 முதல் 65 ஆண்டுகள் வரை உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த கூலி வேலை செய்பவர்கள் மற்றும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்திற்கு விருப்பமுள்ளவர்கள் https://www.tnesevai.tn.gov.























