
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு…!! தேர்வு முடிவு நாளில் பின்பற்றுவது குறித்து வெளியான அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும், 12 ஆம் வகுப்பிற்கு வருகின்ற மார்ச் 25 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பிற்கு வருகின்ற மார்ச் 27 ஆம் தேதியும் பொதுத் தேர்வுகள் முடிவடைய உள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.. மாநில அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை.. மாணவர்களின் நிலை என்ன..?
அதாவது, “தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு முடியும் நாளன்று, அமைதியான முறையில் பள்ளி வளாகங்களை விட்டு செல்லுமாறு” அறிவுறுத்தியுள்ளார். இதற்கு, “அந்தந்த உள்ளூர் காவல் நிலையங்களில் உள்ள காவல் அதிகாரிகளை அன்று நியமித்து பள்ளிகளில் பாதுகாப்பை ஏற்படுத்துமாறும்” உத்தரவிட்டுள்ளார்























