
Today Gold Rate: நகைப்பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி…!! தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவை நோக்கி தங்கம் விலை…!!
தமிழ்நாட்டில் மற்ற நாட்களை ஒப்பிடுகையில், குறிப்பாக சுபமுகூர்த்த தினம், திருவிழா காலங்கள் மற்றும் நகை விலை குறைந்து காணப்படும் சமயங்களில் தங்க நகைகள் அதிகம் விற்பனையாகும். எனவே, இதுபோன்ற நாட்களில் நகை கடைக்காரர்கள் அதிக லாபத்தை ஈட்டுகின்றனர். மேலும், தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை குறைந்து காணப்படுவதால், மதுரையில் உள்ள நகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. அந்தவகையில், இன்று (24.03.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.
அதாவது, இன்றைய நிலவரப்படி மதுரையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 120 குறைந்து 1 சவரன் ரூ. 65,720 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம் 8,215 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி 1 கிலோ ரூ. 1,09,900 ஆகவும், 1 கிராம் ரூ. 109.90 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.























