IPL 2025 தொடர் இன்று தொடக்கம்.. நடக்கவிருக்கும் முதல் போட்டியில் ஏற்பட்ட சிக்கல்..
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆண்கள் 20-20 கிரிக்கெட் போட்டியாகும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான IPL தொடர் மார்ச் 22ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 10 அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இன்று நடக்கவிருக்கும் முதல் போட்டி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
India Post GDS 1st தகுதிப் பட்டியல் 2025 – இந்திய அஞ்சல் முடிவுகளின் பதிவிறக்க இணைப்பு இதோ!!
அதாவது, “18 வது இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (22-03-2025) தொடங்கவிருக்கிறது. இத்தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிகள் மோதிக்கொள்கின்றன. இப்போட்டி ஆனது இந்திய நேரப்படி (IST) 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இதனால் கொல்கத்தா உட்பட போட்டி நடைபெறும் 13 இடங்களிலும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது”. இந்நிலையில் போட்டின் போது மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளதால் ஆட்டம் பாதிக்கப்படும் என்ற சூழல் நிலவி வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.
























