
Today Gold Rate: நகைப்பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி…!! இரண்டாவது நாளாக சரிவை நோக்கி தங்கம் விலை…!!
தமிழ்நாட்டில் மற்ற நாட்களை ஒப்பிடுகையில், குறிப்பாக சுபமுகூர்த்த தினம் மற்றும் திருவிழா காலங்களில் அதிக தங்க நகைகள் விற்பனையாகும். எனவே, இதுபோன்ற நாட்களில் நகை கடைக்காரர்கள் அதிக லாபத்தை ஈட்டுகின்றனர். மேலும், வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள நகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அந்தவகையில், இன்று (22.03.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.
அதாவது, இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 320 குறைந்து 1 சவரன் ரூ. 65,840 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம் 8,230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி 1 கிலோ ரூ. 1,10,000 ஆகவும், 1 கிராம் ரூ. 110 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.























