
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றால் கூடுதல் புள்ளிகள்.. ICC அமல்படுத்த உள்ள புதிய விதிமுறை..
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) என்பது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ICC) நிர்வகிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியாகும். இந்தப் போட்டியின் 27 லீக் தொடர்களில் ஒன்பது அணிகள், 69 போட்டிகள் விளையாடுகின்றன. இதை தொடர்ந்து, லீக் ஆட்டத்தின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் லண்டனின் லார்ட்ஸில் நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதிக்கொள்வார்கள். இந்நிலையில் இப்போட்டியின் விதிமுறையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
UPI வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு…ஏப்ரல் 1 முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு…முழு விவரம் இதோ
அதாவது, “வருகின்ற ஜூன் மாதம் தொடங்கவுள்ள 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு புதிய விதிமுறைகளை கொண்டு வர சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இப்போட்டியில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறும் அணிக்கு போனஸ் புள்ளிகள் வழங்கப்படலாம் என்றும், Away போட்டிகளில் வெற்றி பெற்றால் கூடுதல் புள்ளிகள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது”.

























