இனி வங்கிகள் செயல்படாது…!! வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக வங்கிகள் அறிவிப்பு…!!
இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் (UFBU) சார்பில் நடத்தப்பட்ட உறுப்பினர்கள் உடனான கூட்டத்தொடரில், பணியாளர்கள் ஆட்சேர்ப்பு, வார வேலை நாட்கள் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை UFBU முன்வைத்தது. இந்நிலையில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகளை IBA நிறைவேற்றாததால் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
விவசாயிகளுக்கான சிறப்பான திட்டங்களை அறிவித்த வேளாண் அமைச்சர்… ரூ. 45.661 கோடி மதிப்பீட்டில் வெளியான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்…!!
அதாவது, வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பணி, அனைத்து பணியிடங்களிலும் தகுதியுள்ள பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை, 9 வங்கி ஊழியர் சங்கங்களை உள்ளடக்கிய UFBU கூட்டமைப்பு முன்வைத்திருந்தது. இந்த கோரிக்கைகளுக்கு குறித்து “இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் வரும் மார்ச் 24 மற்றும் 25-ஆம் தேதிகளில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்களின் சங்கங்கள் அறிவித்துள்ளது. இதனால் மார்ச் மாதம் நான்காவது வார சனிக்கிழமை விடுமுறையுடன், ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை எனத் தொடர்ந்து 4 நாட்களுக்கு அனைத்து வங்கிகளின் சேவைகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
























