ATM கார்டு மூலம் ஆயுள் காப்பீடு பெறலாம் என்று தெரியுமா..? பெறும் வழியை  தெரிந்து கொள்ள இதை படிங்க..

0
ATM கார்டு மூலம் ஆயுள் காப்பீடு பெறலாம் என்று தெரியுமா..? பெறும் வழியை  தெரிந்து கொள்ள இதை படிங்க..
ATM கார்டு மூலம் ஆயுள் காப்பீடு பெறலாம் என்று தெரியுமா..? பெறும் வழியை  தெரிந்து கொள்ள இதை படிங்க..

ATM கார்டு மூலம் ஆயுள் காப்பீடு பெறலாம் என்று தெரியுமா..? பெறும் வழியை  தெரிந்து கொள்ள இதை படிங்க..

தற்போதைய டிஜிட்டல் யுகம் மக்களின் பணிகளை எளிதாகி உலகை ஆண்டு கொண்டிருக்கிறது. மேலும், பணம் இல்லாவிட்டாலும் கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது, மொபைல் மூலம் பொருட்களை ஆர்டர் செய்வது போன்ற சகல வசதியும் கிடைக்கிறது. இதுவே ஆன்லைன் பேங்கிங் வசதி இல்லாதவர்கள் ATM டெபிட் கார்டு பயன்படுத்தி தங்களுக்கான தேவைகளை நிவர்த்தி செய்கின்றனர். இந்த ATM கார்டுகள் பணம் எடுப்பதற்கும் பணம் டெபாசிட் செய்வதற்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். இந்நிலையில் இந்த ATM கார்டுகளின் பல்வேறு பயன்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.

இனிமேல் அரசு ஊழியர்களுக்கு இவ்ளோ சலுகைகளா…?? தமிழக பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்புகள்

அதாவது, டெபிட் கார்டில் ஷாப்பிங் அல்லது பணம் எடுக்கும் வசதி உள்ளது என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் டெபிட் கார்டு மூலமாக இலவச காப்பீடு கிடைக்கும் என்று தெரியுமா..?  உங்களுக்கான ATM கார்டு வழங்கப்பட்டவுடன், விபத்துக் காப்பீடு அல்லது ஆயுள் காப்பீடு வசதியும் கிடைக்கிறது. ஆனால், இந்த காப்பீடு ஆனது உங்களிடம் உள்ள டெபிட் கார்டை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.  உதாரணமாக “கிளாசிக் ATM கார்டு பயன்படுத்துவோருக்கு ரூ. 1 லட்சம் இன்சூரன்ஸ், பிளாட்டினம் ATM கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ. 2 லட்சம் இன்சூரன்ஸ், விசா கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ. 1.5 முதல் ரூ. 2 லட்சம் வரை காப்பீடு தொகையாக பெறலாம்” என கூறப்படுகிறது. இந்த “ATM கார்டுகளை 45 நாட்களுக்கு ஒரு முறையாவது பயன்படுத்தவிட்டால் காப்பீட்டு வசதி பொருந்தாது என்றும், மேலும் பலன்கள் குறித்து அறிந்துகொள்ள சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு RBI நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது”.

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!