இனி மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 10,000 மாத ஓய்வூதியம்…புதிய ஓய்வூதிய திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என தகவல்

0
இனி மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 10,000 மாத ஓய்வூதியம்...புதிய ஓய்வூதிய திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என தகவல்
இனி மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 10,000 மாத ஓய்வூதியம்...புதிய ஓய்வூதிய திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என தகவல்

இனி மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 10,000 மாத ஓய்வூதியம்…புதிய ஓய்வூதிய திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என தகவல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது  ஓய்வூதியமானது தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிதாக ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டமானது  வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ. 10,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க அரசு அனுமதி…!! விண்ணப்பிக்கும் கடைசி நாள் என்னவென்று தெரியுமா..?

இதற்கு, மத்திய அரசின் கீழ் குறைந்தது 25 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள், கடைசியாக பெற்ற அடிப்படை சம்பளத்தில் இருந்து 50% தொகையை ஓய்வூதியமாக பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இத்திட்டத்திற்கு ஊழியர்கள் தங்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் இருந்து 10% தொடர்ந்து பங்களிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இத்திட்டத்திற்கு அரசாங்கத்தின் பங்களிப்பு 14% லிருந்து 18.5% ஆக உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் இனி பழைய ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!