உங்க ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மாத்தணுமா…?? அப்போ இத மட்டும் பண்ண போதும்…!!
இன்றைய காலகட்டத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திற்கும் ஆதார் அட்டை முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. ஏனென்றால், வங்கிகளில் புதிய கணக்கு திறக்க, ரயில் பயணம் மேற்கொள்ள, கல்வி நிலையங்களில் சேர போன்ற பல்வேறு விதமான செயல்களுக்கும் ஆதார் கட்டாய ஆவணமாக உள்ளது. மேலும், நிதி பரிவர்த்தனைகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதால், அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு சரிபார்ப்பு ஓடிபிகள் அனுப்பப்படுகிறது.
அரசு பள்ளிகளில் சேர பிறந்த சான்றிதழ் கட்டாயம் …மத்திய அரசு வெளியிட்ட தகவலால் அதிர்ச்சியில் மக்கள்…!!
எனவே, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை நீங்கள் மாற்றிவிட்டாலோ அல்லது தவறான எண்ணாக இருந்தாலோ மற்றொரு புது மொபைல் எண்ணை உடனடியாக மாற்றிக்கொள்ளலாம். இதற்கு, அருகிலுள்ள ஆதார் சேவா கேந்திரா மையத்திற்கு நேரடியாக சென்று எளிதாக திருத்தம் மேற்கொள்ளலாம். அல்லது UIDAI யின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று ஆதார் திருத்தம் மேற்கொள்வதற்கான அபாய்மென்டை பெற்றுக்கொள்ளலாம். அப்படி, ஆதாரில் மொபைல் எண்ணை திருத்தம் செய்தால், 90 நாட்களுக்குள் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை உங்களுடைய வீட்டு முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.


























