
இனி உங்க PF பணத்தை ஏடிஎம்ல் எடுக்கும் EPFO 3.0 திட்டம்…!! நடைமுறைக்கு வரும் தேதியை அறிவித்தார் மத்திய அமைச்சர்..!!
வருங்கால வைப்பு நிதி அமைப்பானது (EPFO), அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை PF ஆக மாதந்தோறும் பிடித்தம் செய்கிறது. மேலும், ஊழியர்கள் அவர்களின் PF பணத்தை எடுக்க வேண்டுமெனில், அலுவலகங்களில் விண்ணப்பித்து, குறைந்தது ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், ஊழியர்களின் சிரமத்தை போக்க, தற்போது EPFO 3.0 என்னும் திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.
நிலவின் மேற்பரப்பில் உறைந்த நிலையில் பனி…!! சந்திரயான் 3 மூலம் கண்டறிந்த செய்தியை வெளியிட்ட இஸ்ரோ…!!
அதாவது, ஊழியர்களின் PF கணக்கை வங்கிக்கணக்கு போல் மாற்றி, ஏடிஎம் யில் பணம் எடுக்கும் எளிய வழிமுறைகளை அறிமுகம் செய்ய உள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் விரைவில் PF பணத்தை எடுக்கவும், முகவரி உள்ளிட்ட விவரங்களை உடனடியாக திருத்தம் செய்யவும் முடியும். மேலும், இத்திட்டத்தில் எந்த வங்கியிலிருந்தும் PF ஓய்வூதியத்தை எடுக்கும் வசதிகளை விரைவில் கொண்டு வர உள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.


























