
Today Gold Rate: தமிழகத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை…!! இது தான் நகை வாங்க நல்ல தருணம் மக்களே…!!
இந்தியாவில் அதிக தங்க ஆபரணங்கள் வாங்கி பயன்படுத்தும் மக்கள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு தான் சிறந்து விளங்குகிறது. ஆனால், கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலையானது உயர்ந்து காணப்பட்டதால், சாமானிய மக்கள் இனி விலை குறைவதற்கு வாய்ப்பு உண்டா என ஏதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், இன்று (06.03.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.
அதாவது, இன்றைய நிலவரப்படி மதுரையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.360 குறைந்து 1 சவரன் ரூ. 64,160 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம் 8,020 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி 1 கிலோ ரூ. 1,06,000 ஆகவும், 1 கிராம் ரூ. 106 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது























