“இனி EMIS பதிவேற்றம் செய்ய தேவையில்லை”..!! தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சிறப்பு தகவல்..!!
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, பள்ளி மாணவர்களுக்கான எமிஸ் (EMIS) எனப்படும் கல்வி மேலாண்மை தரவுகளை பராமரித்து வருகிறது. இதில், ஆசிரியர்கள் தினந்தோறும் மாணவர்கள் குறித்த தகவல்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதாவது, மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள், கல்வி உதவித்தொகை, தேர்வு மதிப்பெண்கள் மற்றும் கலைத் திருவிழாக்களில் பங்கேற்பு போன்ற தகவல்களை EMIS செயலில் பதிவேற்றம் செய்ய அரசால் உத்தரவிடப்பட்டது.
இதனால், “மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியாமல் நாள்தோறும் EMIS தரவுகள் பதிவு செய்வதிலே நேரம் செலவிடுவதாக ஆசிரியர்கள் தங்களது குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், இந்த செயல்முறையை பின்பற்றுவதில் சிக்கல் இருப்பதால் தமிழகத்தை சார்ந்த பெரும்பாலான ஆசிரியர்கள் எதிர்ப்புகள் தெரிவித்தனர் . இந்நிலையில், இனி EMIS பதிவேற்றம் செய்ய தேவையில்லை என்று தமிழக பள்ளிக்கல்வித்துறையிடம் இருந்து அறிக்கை ஒன்று அனைத்து மாநில தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பட்டுள்ளது”.


























