BEL நிறுவனத்தில் Project Engineer காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.55,000/- || இறுதி வாய்ப்பு!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Trainee Engineer-I, Project Engineer-I பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Trainee Engineer-I, Project Engineer-I பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28, 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Trainee Engineer-I:
1st Year: 30,000/-
2nd Year: 35,000/-
3rd Year: 40,000/-
Project Engineer-I:
1st Year: 45,000/-
2nd Year: 50,000/-
3rd Year: 55,000/-
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.02.2025ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


























