
உங்களது பில்களை செலுத்துவதற்கு கூகுள் பே பயன்படுத்துபவரா நீங்கள்..? அப்போ கண்டிப்பாக இதை பற்றி தெரிஞ்சுக்கோங்க.
பண பரிவர்த்தனை செய்ய உபயோகிக்கப்படும் மொபைல் செயலிகளின் பயன்பாடு மக்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கோடிக்கணக்கான மக்கள் கூகுள் பே தளத்தை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கூகுள் பே நிறுவனமானது தனது தளத்தில் புதிய மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.
அதாவது, ” கூகுள் பே, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி செய்யப்படும் பில் செலுத்துதல்களுக்கு வசதிக் கட்டணம் (Convenience Fee) விதிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், கூகுள் பேயின் வலைத்தளத்தின் கூற்றுபடி, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வசதி கட்டணமானது பயனாளரின் பரிவர்த்தனை மதிப்பில் 0.5 – 1% வரை இருக்கும் என்றும், யுபிஐ-இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் மூலம் நேரடியாக செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு எந்த விதி மாற்றம் இல்லை என்று தெரிவித்துள்ளது. இந்த வசதி கட்டணமானது கூகுள் பேயிடம் இருந்து தொடங்கப்பட்டது அல்ல எனவும், போன்பே, பேடிஎம் போன்ற நிறுவனங்களும் மின்சாரம், எரிவாயு போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு ரூ.1 முதல் ரூ.40 வரை கட்டணங்களை விதிக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விதி மாற்றம் பலதரப்பட்ட மக்களின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை குறைக்கக்கூடும் என கூறப்படுகிறது.























