பிப்ரவரி இறுதியில் கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை.. என்ன காரணம் என்று தெரியுமா..?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2025 சனிக்கிழமை தாக்கல் செய்தார். மேலும், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13, 2025 அன்று முடிவடைந்த நிலையில் இரண்டாம் பகுதி மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4, 2025 வரை நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அமைச்சரவை பற்றிய முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி…!! 2025 ஆம் ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு அடித்த ஜாக்பாட் சலுகை…!!
அதாவது, “வருகிற பிப்ரவரி 25-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் மதியம் 12 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 14-ம் தேதி அன்று 2025-26 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதில் இடம்பெறவுள்ள முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது”.


























