Top 10 Longest Rivers of India in Tamil-  Free PDF Download…!!

0
  Top 10 Longest Rivers of India in Tamil-  Free PDF Download…!!
  Top 10 Longest Rivers of India in Tamil-  Free PDF Download…!!

  Top 10 Longest Rivers of India in Tamil-  Free PDF Download…!!

 

இந்தியா,  உலகின் பன்முகத்தன்மை கொண்ட நாடுகளில் ஒன்றாகும். மேலும், இந்தியாவில் ஏராளமான ஆறுகள் பாய்வதால், ‘மிக நீளமான நதிகளின் நாடு’ என்றும்  அழைக்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் உள்ள ஆறுகளை இரண்டு வகையாக பிரிக்கலாம். அதாவது,  ஒன்று இமயமலை ஆறுகள்,  மற்றொன்று தீபகற்ப ஆறுகள் . அதாவது, கங்கை, சிந்து மற்றும் யமுனை போன்ற ஆறுகள் ‘இமயமலை ஆறுகள்’ என்றும்,  கிருஷ்ணா, கோதாவரி மற்றும் காவேரி போன்ற ஆறுகள் ‘தீபகற்ப ஆறுகள்’ எனவும் அழைக்கப்படுக்கின்றன. அந்த வகையில், இந்தியாவில் பாயும் நீளமான 10 ஆறுகள் பற்றிய தொகுப்பை கீழே விரிவாக காண்போம் 

1.கங்கை (2525 கி.மீ):

கங்கை நதி, இந்தியாவின் முதல் மிக நீளமான (1,569 மைல்கள்) மற்றும் உலகின் மூன்றாவது நீளமான நதியாகும். பல புராண கதைகளுடன் இந்த, நதி தொடர்புடையதால் புனிதமான நதியாகக் கருதப்படுகிறது. மேலும், இது உத்தரகாண்டில் அமைந்துள்ள இமயமலையின் கங்கோத்ரி பனிப் பாறைகளில் இருந்து உருவாகிறது. இது, உத்தரகாண்ட், பீகார், உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களின் வழியாக பாய்ந்து இறுதியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது.  மேலும், வலது கரை துணை நதிகளாக யமுனை, சோன், தாமோதர் மற்றும் புன்புன் நதிகளையும் மற்றும் இடது கரை துணை நதிகளாக கோமதி, கார்காரா, கண்டக், கோசி மற்றும் மஹானந்தா ஆகிய  நதிகளையும் உள்ளடக்கி உள்ளது. 

2.கோதாவரி (1464 கி.மீ):

கோதாவரி நதி இந்தியாவின் இரண்டாவது நீளமான மற்றும் தென்னிந்தியாவின் முதல் நீளமான நதி ஆகும்.  இதை, ‘தட்சிண கங்கை’ மற்றும் ‘தெற்கு கங்கை’ எனவும் அழைப்பார்கள்.  இந்தியாவின் மொத்த புவியியல் பரப்பில் 10%, இந்த நதி ஆக்கிரமித்துள்ளது. மேலும், மகாராஷ்டிராவின் திரிம்பகேஷ்வரில் இருந்து உருவாகி தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திர பிரதேசம் வழியாக பாய்ந்து இறுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. மேலும், நாசிக், ராஜமுந்திரி போன்ற பண்டைய புனித தலங்களை தனது கரையில் கொண்டுள்ளதால் இந்துக்களால் பெரிதும் வணங்கப்படுகிறது. இது, வலது கரை துணை நதிகளாக மனைர், பிரவரா, மற்றும் மஞ்சிரா நதிகளையும்,  இடது கரை துணை நதிகளாக சபரி, பிரன்ஹிதா, பூர்ணா மற்றும் இந்திரவாத் நதிகளையும் உள்ளடக்கியது.  இந்த நதி ‘நீர் பாசனத்தில்’ முக்கிய பங்கு வகிக்கிறது.

3.கிருஷ்ணா (1,400 கி.மீ):

 கிருஷ்ணா நதி இந்தியாவின் மூன்றாவது மிக நீளமான நதியாகும். மேலும், இந்தியாவின் மிகவும் பிரபலமான தீபகற்ப நதிகளில்  ஒன்றாகும். ஆற்று படுகை மற்றும் நீர் வரத்து அடிப்படையில், சிந்து, கங்கை மற்றும் கோதவரியை  தொடர்ந்து நான்காவது பெரிய நதியாகும்.  இது, மகாராஷ்டிராவின் மகாபலேஷ்வரின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து உருவாகிறது. மேலும், இந்திய மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா வழியாக கிழக்கு நோக்கி பாய்ந்து ஆந்திர பிரதேசத்தின்  வழியே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.  இது, துங்கபத்ரா, பீமா, முசி, கட்டபிரபா மற்றும் மலபிரபா போன்ற துணை நதிகளை கொண்டுள்ளது. இந்த நதி தென்னிந்தியாவில் நீர் பாசனம் மற்றும் விவசாயத்தை நிலை நிறுத்துகிறது.

  1. யமுனை (1,376 கி.மீ):

இந்தியாவின் 4வது மிக நீளமான மற்றும் முதல் மிக நீளமான துணை நதி ஆகும். இது, கங்கை நதியின் வெளியேற்றத்தின் மூலம் மிக நீளமான துணை நதி என்ற பெருமையை பெற்றுள்ளது. இது, உத்தரகண்ட் மாநிலத்தில் பந்தர் பூஞ்ச் சிகரத்தில் அமைந்துள்ள யமுனோத்திரி பனிப் பாறையிலிருந்து உருவாகிறது.  இது, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ஹரியானா, டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களின் வழியாக பாய்கிறது. இறுதியாக, உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் பிராயக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் கங்கையுடன் கலக்கிறது. இது, வலது கரை துணை நதிகளாக பெட்வா, சம்பல் மற்றும் கென் நதிகளையும், இடது கரை துணை நதிகளாக சாரதா மற்றும் ஹிண்டன்  நதிகளையும் உள்ளடக்கியது.

  1. நர்மதா (1,312 கி.மீ ):

இது, இந்தியாவின் ஐந்தாவது மிக நீளமான நதியாகும். மேலும், இந்தியாவின் ஏழு புனித நதிகளில் ஒன்றாகும். இது, ‘மத்திய பிரதேசம் மற்றும் குஜராத்தின் உயிர் நாடி’ எனவும் அழைக்கப்படுகிறது. இது, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பாயும் இந்தியாவின் இரண்டு தீபகற்ப நதிகளில் ஒன்றாகும் (மற்றொன்று தபி நதி). மேலும்,  இது மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் எல்லைக்கு அருகில், கிழக்கு சத்புரா மலைத்தொடரில் அமைந்துள்ள  அமர்கண்டக் பீடபூமிலிருந்து உருவாகிறது. இது, மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் வழியாக அரபி கடலில் உள்ள கம்பட் வளைகுடாவில் கலக்கிறது. இது, வலது கரை துணை நதிகளாக கோரல், ஹிரன் மற்றும் டெண்டோனி நதிகளையும், இடது கரை துணை நதிகளாக ஷேர், கர்ஜன் மற்றும் பஞ்சார் நதிகளையும் கொண்டுள்ளது. 

List of Waterfalls and Rivers in India State Wise in Tamil  – PDF Download

 
  1. சிந்து (1,114 கி.மீ):

சிந்து நதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிந்து சமவெளி நாகரிகம் வளர்ந்த இடமாகும். இதன், மொத்த நீளம் 3,180 கி.மீ. ஆனால், இந்தியாவில் பாயும் இதன் நீளம் 1,114 கி.மீ ஆகும். இது, பெரும்பாலும் பாகிஸ்தான் பகுதியில் தான் பாய்கிறது. இது சீனாவின் திபெத்தில், மானசரோவர் ஏரியில் இருந்து உருவாகிறது. பாகிஸ்தானில் உள்ள கில்கிட் – பால்டிஸ்தான், கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் வழியாக பாய்ந்து இறுதியாக அரபிக்கடலில் கலக்கிறது. ஜீலம், செனாப், ராவி, பியாஸ் காபூல் மற்றும் சட்லஜ் போன்ற துணை நதிகளை கொண்டுள்ளது. மேலும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே உள்ள ஒப்பந்தத்தின் படி 20% தண்ணீரை இந்தியா பயன்படுத்தலாம்.

  1. பிரம்மபுத்திரா (916 கி.மீ):

பிரம்மபுத்திரா ‘எல்லை தாண்டிய நதி’ என்றும், ‘யர்லுங் சாங்போ நதி’ என்றும் ‘அசாமின் உயிர் நாடி’ என்றும் அழைக்கப்படுகிறது. இது, சீனாவின் திபெத்திய இமயமலை பகுதியில் அமைந்துள்ள அங்சி  பனி பாறையிலிருந்து  உருவாகிறது. இது அருணாச்சல பிரதேசம் வழியாக இந்தியாவில் நுழைகிறது. அதன்பின், அசாம் வழியாக வங்காள தேசத்தில் நுழைந்து அங்கு ‘ஜமுனா என அழைக்கப்படுகிறது. இறுதியாக கங்கையுடன் இணைந்து சுந்தரவனத்தில் மிகப்பெரிய டெல்டாவை உருவாக்குகிறது. இதன் மொத்த நீளம் 2,900 கி.மீ ஆகும். ஆனால், இந்தியாவில் 916 கி.மீ தூரம் பாய்கிறது. 

  1. மகாநதி (890 கி.மீ):

மகாநதி என்றால் சமஸ்கிருதத்தில் மிகப்பெரிய நதி என்று அர்த்தம். இது, ‘ஒடிசாவின் துயரம்’ மற்றும் ‘ஹிராகுண்ட் அணை’ என்றும் அழைக்கப்படுகிறது.  இது, சத்தீஸ்கர் மாநிலத்தில் சிவாஹா மலையிலிருந்து உருவாகிறது. இது, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா வழியாக பாய்ந்து இறுதியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் வலது கரை துணை நதிகளாக  பாரி மற்றும் ஓங் நதியும், இடது கரை துணை நதிகளாக ஹிஸ்தியோ, மாண்ட், இபி நதிகளும்  உள்ளன.  இது, ஆசியாவின் மிக நீளமான செயற்கை ஏரியாக கருதப்படுகிறது. 

  1. காவிரி (800 கி.மீ):

தமிழ்நாட்டின் மிக நீளமான நதி காவிரி ஆகும். மேலும், தென்னிந்தியாவில் கோதாவரி மற்றும் கிருஷ்ணாவிற்கு பிறகு மூன்றாவது நீளமான நதியாகக் கருதப்படுகிறது . இது, ஏராளமான கிளை நதிகளாக பிரிந்து ‘தென்னிந்தியாவின் தோட்டம்’ என்று அழைக்கப்படும் ஒரு பரந்த டெல்டாவை உருவாக்குகிறது. இது துணை நதிகளாக  லட்சுமண தீர்த்தம், ஹேமாவதி, சிம்ஷா, அர்க்காவதி மற்றும் கபினி நதிகளை உள்ளடக்கியது. இது, கர்நாடகாவின் தலைக்காவிரியில் இருந்து உருவாகி இறுதியில் பாக் ஜலசந்தியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. 

10. தப்தி (724 கி.மீ):

தப்தி ஒரு தீபகற்ப நதியாகும். மேலும், இது மத்தியப்பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தின் முல்தாயி  பகுதியில் இருந்து உருவாகிறது. மேலும், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மேற்கு நோக்கி பாய்ந்து இறுதியில் அரபிக்கடலில் உள்ள கம்பத் வளைகுடாவில் கலக்கிறது. இது, கிர்னா, பூர்ணா, பஞ்சாரா மற்றும் பெங்கங்கா போன்ற துணை நதிகளை கொண்டுள்ளது. மேலும், மத்திய இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைப்பில்  முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், மெல்காட் காடு இந்த தப்தி நதியிலிருந்து உயிர் பெறுகிறது. இந்த காடு அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு தாயகமாக விளங்குகிறது.

How to remember Rivers in India: 

இந்தியாவில் பாயும் முதல் 10 நீளமான ஆறுகள் குறித்த முக்கிய தகவல்கள்  மற்றும் அவை பாயும் நீளத்தின் அடிப்படையில் மேலே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். இதனை, முழுவதும் படித்து எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள சில குறிப்புகளை வழங்குகிறோம். உதாரணமாக, ‘R K Singh Go to Yamuna Ghat’ இதற்கு அர்த்தம் Ramganga, Koshi, Son, Gandak, Yamuna மற்றும் Garkat ஆகும். அதாவது, இவையனைத்தும் கங்கையின் துணை நதிகளை குறிக்கிறது. எனவே, இதுபோன்ற சில எளிதில் புரியும் படியான குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டு பொது அறிவில் சிறந்து விளங்க வேண்டுகிறோம்.

Download PDF

 

 Join ExamsDaily Whatsapp Group

1. How many Rivers are there in India?

   Ans: Total 400 Rivers with 8 major river systems.

2. Which is the Largest River in the World?

      Ans: The Nile River (6,650 km).

3.  Which is the Smallest River in India?

       Ans: The Arvari River in Rajasthan (45 km).

4.  Which is the Cleanest River in India?

          Ans: The Umngot River in Meghalaya.

5. Which is the dirtiest River in India?

             Ans: The Yamuna River.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!