
Today Vegetable News: “சென்னையில் தாறுமாறாக உயர்ந்த காய்கறிகளின் விலை…!!” அட, ஒரு கிலோ வெங்காயம் இவ்வளவா…?
திருவிழா காலங்கள் என்றாலே வியாபாரிகள் காய்கறிகளின் விலையை சற்று உயர்த்தி விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். ஆனால், மக்கள் இந்த விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். மேலும், வருகிற செவ்வாய்க்கிழமை தைப்பூச திருநாள் என்பதால் சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த சில தினங்களாக விற்பனை செய்யப்பட்டு வந்த காய்கறிகளின் விலையானது தற்போது உயர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், இன்று (08.02.2025) விற்பனையாகும் காய்கறிகளின் விலை நிலவரத்தை பற்றி கீழே விரிவாக காண்போம்.
அதாவது, சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளி 30 ரூபாய் , 1 கிலோ சின்ன வெங்காயம் 70 ரூபாய் , 1 கிலோ பெரிய வெங்காயம் 36 ரூபாய், கத்தரிக்காய் 40 ரூபாய் , முருங்கைக்காய் 120 ரூபாய் , உருளைக்கிழங்கு 36 ரூபாய் , பீட்ரூட் 42 ரூபாய் , முட்டைகோஸ் 24 ரூபாய் , அவரைக்காய் 50 ரூபாய் , கேரட் 50 ரூபாய், பீன்ஸ் 52 ரூபாய் , இஞ்சி 67 ரூபாய் மற்றும் பூண்டு 288 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

























