
” ATM ல் பணம் எடுப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு…!!” ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி தகவல்…
ஏடிஎம் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனைகள் செய்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதாவது, அதில் ‘ஒரு நாளைக்கு ஏடிஎம்யில் 5 முறை மட்டுமே பணப் பரிவர்த்தனைகளை இலவசமாக செய்ய முடியும்’ என அறிவித்துள்ளது. மேலும், ‘ஏடிஎம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பிடிக்கப்படும் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாகவும்’ தெரிவித்துள்ளது.
TNPSC Group 4 General Tamil Quiz with Answer || Unit I Section 1 Part A – PDF Download…!!
அந்த வகையில், ஏடிஎம்யில் 6 வது முறை பணம் எடுப்பதற்கும்,அதிகபட்ச பணப் பரிவர்த்தனைகளை செய்வதற்கும் வங்கிகள் பிடிக்கும் கட்டணத்தை ரூ. 21 லிருந்து ரூ. 22 ஆக உயர்த்தியுள்ளது. அதேபோல், வேறு வங்கி ஏடிஎம்யை பயன்படுத்துவதற்கான கட்டணங்களையும் உயர்த்தியுள்ளது. அதாவது, ஏடிஎம் இன்டர்சேஞ்ச் பணப் பரிவர்த்தனைக்கான கட்டணம் ரூ. 17 லிருந்து ரூ. 19 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

























