
TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,701 பேர் அரசு பணிகளுக்கு தேர்வு..!! “TNPSC ஆணையம் தகவல்”..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) ஆனது தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டித் தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த ஜூன் மாதம் 9ம் தேதியன்று, 9,491 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 4 தேர்வு நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி அன்று TNPSC ஆணையத்தால் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து, TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, இந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,701 பேர் அரசு துறையில் உள்ள பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக TNPSC ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.


























TNPSC