
அவசர பண தேவையை சமாளிக்க தனிநபர் கடன் வாங்கப்போறீங்களா..? இந்த கட்டணங்கள் பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..
தனிநபர் கடன் என்பது தனிநபரால் அவசர தேவைகளை எதிர்கொள்ள வங்கியிடம் இருந்து கடன் பெறும் முறையாகும். இந்த தனிநபர் கடனை குழந்தைகளின் கல்வி செலவு, வீட்டை புதுப்பித்தல் மற்றும் மருத்துவ சிகிச்சை போன்ற பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும், தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, பல முகவர்கள் அல்லது வங்கிகள் சில கட்டணங்களை மறைப்பதால் உங்கள் கடனுக்கான ஒட்டுமொத்த செலவு அதிகரிக்கிறது. இந்த மறைக்கப்படும் கட்டணங்களை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலில், கடன் விண்ணப்பத்தை நிர்வகிக்க “செயலாக்க கட்டணம்” வசூலிக்கப்படுகிறது. இது பொதுவாக கடன் தொகையில் இருந்து 1% முதல் 3% வரை இருக்ககூடும். இதை தொடர்ந்து, உங்கள் கடனைக் வரையறுக்கப்பட்ட காலம் முடிவதற்குள் முழுமையாக திருப்பிச் செலுத்த விரும்பினால், வங்கிகள் “முன்கூட்டியே கட்டணமாக” 2% முதல் 5% வரை பிடித்தம் செய்கின்றன. மேலும், வங்கிகள் கடனுடன் காப்பீட்டுக் கொள்கையை சேர்க்கின்றன, இதனால் நீங்கள் அதிக “பிரீமியம் கட்டணத்தை” செலுத்த வேண்டியிருக்கும். இறுதியாக, கடன் ஒப்பந்தத்திற்கான “முத்திரைக் மற்றும் ஆவணக் கட்டணங்கள்” ஆகியவை கடன் செயலாக்கத்தில் சேர்க்கப்படும் கூடுதல் செலவுகளாகும். இந்த மறைக்கப்பட்ட கட்டணங்களை தவிர்க்க கடன் ஒப்பந்தத்தை கவனமாகப் படித்து, தெளிவற்ற கட்டணங்கள் குறித்து வங்கியிடம் விளக்கம் கேட்டு கொள்வது மூலம் தேவையற்ற கடன் சுமையை குறைக்கலாம் என நிதி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

























