
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது…!! நாளை(11.12.2024) இந்த மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை…!!
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தற்போது வலுப்பெற்றுள்ளது. மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதியை நோக்கி நகர உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நாளை(11.12.2024) கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.























