
ஓய்வு காலத்தில் அதிக வருமானம் பெற உதவும் திட்டம்.. ரூ.15,000 முதலீடு செய்தால் மாதாந்திர தொகை எவ்வளவு தெரியுமா?..
உங்கள் ஓய்வுக்காலத்தில் நீங்கள் பெரிய அளவிலான ஓய்வூதியத்தைப் பெற விரும்பினால், தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) உங்களுக்கு நிலையான வருமானத்தை அளிக்கும். இந்த NPS திட்டம் என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட தன்னார்வ பங்களிப்பு திட்டமாகும். மேலும், வருமான வரிச் சட்டம் 1961 இன் கீழ் இந்த NPS திட்டமானது ஒரு தனிநபருக்கு பல வரிச் சலுகைகள் பெற்று தர உதவுகிறது.
அதாவது இந்த திட்டத்தில் 40 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால், ஓய்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.50 ஆயிரம் வரை ஓய்வூதியம் பெறலாம். மேலும், நீங்கள் NPS இல் முதலீடு செய்யும் போது 60% தொகையை ஓய்வு பெற்றவுடன் கோரவும் மீதமுள்ள 40% தொகையை வேறு ஏதேனும் வருடாந்திர திட்டத்தில் இரண்டு பகுதிகளாகப் பிரித்தும் முதலீடு செய்யலாம். இவ்வாறு பிரித்துக் நிதியை முதலீடு செய்யும் போது உங்களுக்கு அதிக மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கும்.
“அதானியை முதல்வர் சந்திக்கவில்லை” அவ்வாறு கூறுவோர் மீது வழக்கு..!! அமைச்சர் பேச்சால் பரபரப்பு…
அந்த வகையில் 25 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.15,000 முதலீடு செய்வதன் மூலம் உங்கள் மொத்த பங்களிப்பு ரூ.45 லட்சமாக இருக்கும். மேலும் உங்கள் முதலீட்டின் சராசரி ஆண்டு வருமானம் 10% என்று வைத்துக் கொண்டால், ஓய்வூதியத்தின் போது திரட்டப்பட்ட மொத்த தொகை ரூ.2 கோடியாக இருக்கும். இந்த மொத்த தொகையில் 60% ரூ.1.20 கோடியை நீங்கள் மொத்தமாக திரும்பப் பெறவும் மீதமுள்ள 40% தொகையை வேறொரு வருடாந்திரத் திட்டத்தில் முதலீடு செய்தால் ரூ.80.27 லட்சம் வரை லாபம் பெறலாம். இந்த வருடாந்திர வருமானத்தில் 8 சதவீதம் அதாவது ரூ.53,516 மாதாந்திர ஓய்வூதிய தொகையாக உங்களுக்கு கிடைக்கும். இந்த தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C மற்றும் 80CCD கீழ் வரிச் சலுகையும் கிடைக்கும் என ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தெரிவித்துள்ளது.























