
ரூ.150 முதலீடு செய்தால் 7 லட்சம் வரை லாபம் பெறலாம்.. மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ள எல்.ஐ.சியின் சிறப்பு பாலிசி ..
அதாவது எல்.ஐ.சி. ஜீவன் தருண் திட்டம், குழந்தைகளின் அதிகரித்து வரும் மருத்துவ மற்றும் கல்வித் தேவைகளைக் கவனித்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. மேலும் இந்த காப்பீட்டு திட்டத்தில் முதலீடு செய்யும் குழந்தையின் வயது குறைந்தது மூன்று மாதங்கள் முதல் அதிகபட்சம் பன்னிரண்டு வயதுக்குள் இருக்க வேண்டும். இதுவே, இளைஞர்கள் 20 வயது வரை இந்த திட்டத்தின் கீழ் முழுமையாக முதலீடு செய்து கொள்ளலாம்.
இதை தொடர்ந்து இந்த பாலிசியில் குறைந்தபட்சம் ரூ.5,000 முதலீடு செய்யலாம். மேலும் இதற்கென உச்சவரம்பு எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு 25 வயது ஆனவுடன் மொத்தப் பணத்தைக் கோரலாம். இந்த திட்டத்தில் நீங்கள் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர முறையில் டெபாசிட் செய்து கொள்ளலாம். மேலும் இந்த கவரேஜ் திட்டத்தில் ஒவ்வொரு நாளும் ரூ.150 செலுத்தினால், ஆண்டு பிரீமியம் ரூ.54,000 இருக்கும். அந்த வகையில் 8 ஆண்டுகள் செலுத்தினால் ரூ.4.32 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கும். மேலும் இதற்கான போனஸ் தொகையாக ரூ.2.47 லட்சம் எல்.ஐ.சி.யால் வழங்கப்படும். 25 வயதிற்கு பின்னர் சுமார் 7 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என எல்.ஐ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

























